மாணவர்களுக்கு புகையிலை தீமையைப் பற்றி விழிப்புணர்வு

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (22:56 IST)
ஆனைமலை தாலுக்கா, பெரியபோது அரசு உயர் நிலைப்பள்ளியில்.,புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கு புகையிலை மற்றும்  புகையிலைபொருட்களின் தீமை பற்றி விழிப்புணர்வு   நடைபெற்றது. 

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி     நகராட்சிக்குட்பட்ட ஆனைமலை தாலுக்கா, பெரியபோது அரசு உயர் நிலைப்பள்ளியில்.,மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கு புகையிலை மற்றும்  புகையிலைபொருட்கள்  உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றிய நலக்கல்வி அளிக்கப்பட்டது. 
 
இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர்.ரம்யா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். தலைமையாசிரியர்,  ஆசிரியர்கள்.,ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலரும் கலந்து   கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்