மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!

Senthil Velan
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:03 IST)
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.
 
மறைந்த ஆர்.எம். வீரப்பன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அரசியல் மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் திகழ்ந்தவர்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 98ஆவது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். 
 
இந்நிலையில் உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஆர்.எம் வீரப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்