தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப்பள்ளி மூடலா ? – ஷாக் ஆன செங்கோட்டையன் !

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (08:42 IST)
தமிழகத்தில் தண்ணீர்ப்பற்றாக்குறைக் காரணமாக எந்தப்பள்ளியும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதுவும் சென்னைப் போன்ற மாநகரங்களில் மக்கள் தண்ணிருக்காக சாலைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் அவலம் நேர்ந்துள்ளது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதைக் கொஞ்சம் தள்ளிப்போட சொல்லி கோரிக்கை எழுந்தது. ஆனால் ஜூன் 3 ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஆனால் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 3000 மாணவிகள்  படித்து வருகின்றன. கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரைப் படிக்கும் மாணவிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு அறிவிப்பு தரப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அனுமதியோடுதான் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் எந்த அரசுப்பள்ளியும் தண்ணீர்ப்பற்றாக்குறையால் மூடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்