பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “6 மாத காலம் நான் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை 50 ஆயிரம் பேர் சந்தித்தார்கள்.
பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது” என பேசியுள்ளார்.
ஆனால் சீமான் வேலூர் சிறை செல்வதற்கு முன்பாகவே மூவரும் அச்சிறையில் இருந்தது மக்களுக்கு தெரியும் என்றும், அப்போதே சட்டப்போராட்டங்கள் நடந்து வந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.