மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச்சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி அமல்படுத்தப்பட்ட இந்த வேளாண்மை சட்டம், விவசாயிகளின் போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஆகும். வேளாண்குடி மக்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்