கொரோனா தாக்குனா கோவிலுக்கு போவீங்களா? ஆஸ்பத்திரி போவீங்களா?– சீமான் கேள்வி!

Webdunia
திங்கள், 4 மே 2020 (10:30 IST)
நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள துயரங்களை சுட்டிக்காட்டி ஜோதிகா பேசிய விவகாரம் குறித்து சண்டையிடுபவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சில மாதங்களுக்கு முன்பு சினிமா விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. ஜோதிகாவுக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், அவரை விமர்சித்தும் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜோதிகா பேசியது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜோதிகாவை அவதூறாக பேசிபவர்களுக்கு கேள்வி ஒன்றையும் முன் வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில், ”ஊரடங்கால் மக்கள் பசி பட்டினியில் கிடக்கின்றனர். பலர் கால்நடை பயணமாக சென்று இறக்கின்றனர். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் அளிக்காமல் கை மட்டும் தட்டுகிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனி பெரும் முதலாளிகளுக்கு அரசு பணத்தை தாரை வார்க்கிறது. இதெற்கெல்லாம் வராத கோபம் “நாம் கோவிலுக்கு செலவு செய்வதை போல பள்ளிகளுக்கும், மருத்துவமனைக்கும் செலவு செய்யலாம்” என ஜோதிகா, சூர்யா கூறியதற்கு கோபம் வருகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஒருவேளை உங்களுக்கு கொரோனா வந்தால் கோவிலுக்கு செல்வீர்களா? மருத்துவமனைக்கு செல்வீர்களா” என கேள்வி எழுப்பியுள்ள அவர் “அன்ன சத்திரம் வைத்தல் “ என்ற பாரதியின் வரிகளை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்