தமிழ் இலக்கியத்தின் மூத்த படைப்பாளி செயப்பிரரகாசம் மறைவிற்கு அவரது இறப்பிற்கு சீமான் இரங்கல் அஞ்சலி பதிவிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் கரிசல் மண்ணின் வாசம் மாறாமல் சிறுகதைகள் ப, கவிதை, நாவல் கட்டுரைகள் என எழுத்துத்துறையின் அனைத்து பரிமாணங்களையும் படைத்தவர் பா.செயப்பிரகாசம்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஐயா பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஈழ விடுதலைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.