கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி..! பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்..!!

Senthil Velan

வியாழன், 30 மே 2024 (17:52 IST)
விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி  போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஜூன் 1ம் தேதிதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்நிலையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.   டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்பு படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தொடர்ந்து இன்று மாலை மாலை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி இருக்கும் பிரதமர், அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் மொத்தம் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு அவர் டெல்லி புறப்பட்டு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை.! ஜூன் 1-ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல்...!!

பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி முழுவதும் காவல்துறை,, பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்