தமிழகத்தில் ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பு.... ?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (17:06 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறப்பது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

 ஆனால் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்த நடவடிக்கை நடைபெற்று வருகிறது. அதேபோல் தெலுங்கானாவிலும் பள்ளிகள் திறக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 6 ஆம்தேதி பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், ஆக்ஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்