இப்ப வீட்டுக்கு போகலாமா? கூடாதா? – பள்ளி விடுமுறை அறிவிப்பில் குழப்பம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:10 IST)
சென்னை. திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் குறிப்பிட்ட தாலுக்காக்களில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூவிருந்தவல்லி மற்றும் திருவள்ளூர் ஆகிய தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார். திருவொற்றியூரிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அளிக்காதது குறித்து ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ALSO READ: ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி: 3 உயிர்கள் பரிதாப பலி!

அதற்கு பதில் அளித்த திருவள்ளூர் ஆட்சியர் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களுக்கான விடுமுறையை சென்னை ஆட்சியர் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக கூறியுள்ளார். மேற்கண்ட தாலுக்காக்கள் வருவாய் மாவட்டமாக சென்னையிலும், கல்வி மாவட்டமாக திருவள்ளூரிலும் இருப்பதால் இந்த விடுமுறை அறிவிப்பில் குழப்பம் எழுந்துள்ளது.

இதனால் விடுமுறை அளிக்கப்பட்டும் பள்ளிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையிலான விளக்கம் மற்றும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்