நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் பங்குச்சந்தை சரிவில் இருப்பதாக கூறப்படுவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்றும் கடந்த செவ்வாய்கிழமை ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்ததால் நஷ்டம் சிறிதளவு ஈடு கட்டப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் சரிவை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 537 புள்ளிகள் குறைந்து 77,020 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் நிஃப்டி 23,322 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் HCL டெக்னாலஜி, HDFC வங்கி, இன்போசிஸ், TCS போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.