பள்ளி ஆசிரியை படுகொலை ; கணவர் மீது சந்தேகம் ; போலீசார் விசாரணை

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (19:12 IST)
ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராமநாதபுரம் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜா என்பவரின் மனைவி சண்முக பிரியா. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அவர், இன்று காலை அவரது வீட்டின் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
 
இதுகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர் துணி காயப்போடும் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டதை கண்டறிந்தனர். அதன்பின் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
வீட்டின் அருகிலேயே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது, அவர் அணிந்திருந்த நகைகள் திருடு போகாமல் இருந்தது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதேசமயம் மனைவி இறந்தும் எந்த சலனும் இல்லாமல் இருந்த அவரின் கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
அவரின் வாக்குமூலம் வெளியானால் சண்முகபிரியா ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்