ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தீர்ப்பு: பள்ளிக்கல்வி துறை இன்று ஆலோசனை

Siva

வியாழன், 4 செப்டம்பர் 2025 (10:41 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
 
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்த ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தத் தேர்வுக்கான வழிமுறைகள், கால அட்டவணை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்