தங்கம் விலை இன்று சற்று குறைவு.. ஆனால் சவரன் ரூ.78000-ஐ தாண்டியது

Siva

வியாழன், 4 செப்டம்பர் 2025 (10:25 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 10 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது.
 
சென்னையில், ஒரு கிராம் ஆபரண தங்கம் (22 கேரட்) ரூ.9,795 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.78,360 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை பொதுமக்கள் மற்றும் நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூய தங்கத்தின் விலையு ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) ரூ.10,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எட்டு கிராம் தூய தங்கம் ரூ.85,480-க்கு விற்பனையாகிறது.
 
தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பங்குச்சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவை கூறப்படுகின்றன.
 
தங்கம் விலையில் சிறிய இறக்கம் இருந்தாலும் வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.137 மற்றும் ஒரு கிலோ ரூ.137,000 என்ற விலையில் விற்பனையாகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்