சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பேட்டி!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (06:39 IST)
சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் கைது செய்து கோவையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடந்த சனிக்கிழமையன்று மத்திய சிறையில் அடைத்தனர்.
அதற்கு முன்னதாக கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு சிறையில் அடைப்பதற்கு முன்பு சிறையில் உள்ள மருத்துவமனையில் சவுக்கு சங்கரை பரிசோதனை செய்துவிட்டு சிறையில் அடைத்தனர்.
 
அப்போது சவுக்கு சங்கர் உடலில் வாயில் மட்டும் சிறிது காயம் ஏற்பட்டதாகவும் மற்ற எந்த விதமான காயங்கள் ஏற்படவில்லை என்றும் சிறையில் அடைத்த பிறகு காயம் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சவுக்கு சங்கர் 10"க்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி பலமாக தாக்கி உள்ளனர் எனவும் இதில் சவுக்கு சங்கருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று சவுக்கு சங்கரை வழக்கறிஞர் சிறையில் நேரில் சந்தித்ததாகவும் மேலும் சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் குறிப்பாக ஏற்கனவே கடலூரில் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில் குமார் தற்போது கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக இருப்பதால் சவுக்கு சங்கரை பழி வாங்கும் நோக்கில் கோவையில் வழக்கு பதிவு செய்து சித்திரவதை செய்து வருவதாகவும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அராஜகம் செய்து வருவதாகவும் தொடர்ச்சியாக தமிழகத்தில் லாக்கப் மரணம் நடந்து வருவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
 
மேலும் சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தலையிட்டு சவுக்கு சங்கரை நேரில் பார்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளதாக இவ்வாறு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்