சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் வந்த பின்னர் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். நேற்று இந்த கொலை வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் ஒரு சப்இன்ஸ்பெக்டரான பாலகிருஷ்ணன் கைது செய்யாவிட்டதாகவும், அவரை தொடர்ந்து தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்து ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தூள்ளன,
மேலும் தந்தை மகன் கொலை வழக்கில் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒரு தலைமை காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இன்னும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இந்த நிலையில் அவரை தேடிய நிலையில் தற்போது அவரும் பிடிபட்டு சிபிசிஐடி பிடியில் இருப்பதாகவும் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் செய்யப்பட்டதாகவும், அவரும் இன்னும் சில நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது