சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனாவால் மரணம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பால்துரை சற்றுமுன் சிகிச்சை பலனின்றி பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்