அரசியலுக்கு வராமல் நல்லது செய்வது சாத்தியமே – ரஜினி சிஷ்யர் திடீர் அறிவிப்பு!

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (17:17 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு சிறிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றார்போல ரஜினிக்கு ஆதரவாக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து ஆவேசமாகப் பேசிவந்தார். இதனால் ரஜினி கட்சி ஆரம்பித்ததும் எப்படியும் அவர் கட்சியில் இணைவார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இன்று அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்றும், ஏழை மக்களுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்றும் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்குச் செய்வதே சிறந்தது.

இதற்கு முன்னால் பதிவிட்ட வீடியோ என்னுடைய 12 ஆண்டுகால முயற்சி மற்றும் நம்பிக்கைக்குச் சான்று. அவர்களது கனவுகள் நனவானதை நீங்கள் காணலாம். இந்தக் குழந்தை உட்பட மற்ற 200 குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இவற்றைச் செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள்" எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்