சிறையில் இருந்து 3 முறை ரகசியமாக வெளியே சென்ற சசிகலா: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (13:56 IST)
பெங்களூர் சிறையும் சசிகலா குறித்தும் வரும் தகவல்களையும் பார்த்தால் இப்படியெல்லாம் ஒரு சிறையில் நடக்குமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு சிறை விதிகள் வளைக்கப்பட்டு சசிகலாவுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.


 
 
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா அம்மாநில டிஜிபிக்கு அனுப்பிய அறிக்கை பெரும் புயலை கிளப்பி வருகிறது. பொறுப்பேற்ற 10 நாட்களுக்குள் எப்படி ரூபா இவ்வளவு தூரம் சசிகலாவுக்கு எதிராக பாய்ந்தார் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
 
இந்நிலையில் ரூபாவுக்கு சிறையில் உள்ள பெயர் குறிப்பிடாத ஜெயிலர் எழுதிய மொட்டை கடிதம் தான் அனைத்திற்கும் காரணம் என்ற தகவல் வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை தலை சுற்றும் அளவுக்கு உள்ளது.
 
மொட்டை கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை:-
 
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் வசதிகள் செய்து கொடுக்க கடந்த 5 மாதங்களாக சிறைத்துறை டிஜிபி, ஐஜி, ஜெயிலர், கண்காணிப்பாளர், மருத்துவர், காவலாளிகள், பாரா போலீசார் ஆகியோருக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
சசிகலாவுக்காக சிறையில் நவீன சமையல் அறை அமைத்து கொடுக்க டிஜிபிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. சசிகலாவுக்கு ஏதாவது உதவிகள் சலுகைகள் செய்தால் சிறையில் வெள்ளை நிற துண்டு சீட்டு அளிக்கப்படும். அதனை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
 
இந்த கடிதத்தில் முக்கியமான அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார் அவர். சிறையில் உள்ள விவிஐபி சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவரின் காரில்  சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு சசிகலா 3 முறை சென்று வந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்