ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்த சசிகலா

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (09:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து அவரது போயஸ் கார்டன் வீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.


 

 
வழக்கமாக ஜெயலலிதாவின் கார் நிற்கும் இடத்தில் தற்போது அவரது தோழி சசிகலாவின் கார் நிற்கிறது. போயஸ் கார்டனில் அனுமதி மறுக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் தற்போது அங்கு வசிக்கத் தொடங்கி விட்டனர். மேலும், ஜெயலலிதாவின் 15 வருடங்களுக்கு மேல் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியே அனுப்பப்பட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், போயஸ் கார்டனுக்கு தன்னை சந்திக்க  வரும் வி.ஐ.பி.க்களை ஜெயலலிதா ஒரு குறிப்பிட்ட அறையில்தான் சந்தித்து பேசுவார்.  சசிகலா தற்போது அதே அறையை பயன்படுத்த துவங்கிவிட்டார்.
 
தினந்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் நேற்று போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது ஜெயலலிதா அமரும் அதே இருக்கையில் அமர்ந்துதான் சசிகலா அவரிடம் பேசினார்.


 

 
ஜெயலலிதா தன் வசம் வைத்திருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும், கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்று நடத்த வேண்டும் என  சில அதிமுக நிர்வாகிகள் நேற்று நேரிடையாகவே சென்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஜெயலலிதா அமரும் இருக்கையில் சசிகலா அமர்ந்திருப்பதை பார்க்கும் போது ஜெ.வின் இடத்திற்கு அவர்  முன்னேறி விட்டதாக கட்சி நிர்வாகிகள் பேசிக் கொள்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்