தனது கணவரை ஒதுக்கி வைத்ததை மனதில் வைத்துக் கொண்டு, முதல்வர் ஜெ.வை சசிகலா பழிவாங்கி விட்டார் என சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா “முதல்வர் மரணம் அடைந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே எனக்குப்படுகிறது.
அம்மா இறந்த பின்னும், எல்லா இடத்திலும் சசிகலாவின் குடும்பத்தினர்தான் நிற்கிறார்கள். அம்மாவின் முகத்தை பார்க்க ஏராளமான தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. உண்மையில், அம்மா தொண்டர்களை காண வேண்டும் என்று ஆசை படுபவர். ஆனால் இவர்கள் தடுத்துவிட்டனர்.
அம்மாவிற்கு எல்லாமும் நாங்கள்தான் என்று காட்டுவதற்காகவே இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். தனது கணவர் நடராஜனை, அம்மா ஒதுக்கி வைத்ததை இத்தனை வருடங்களாக மனதில் வைத்துக் கொண்டு சசிகலா பழிவாங்கிவிட்டார்” என்று அவர் கூறினார்.