யார் இதை வெளியிட்டது? சசிகலா கையெழுத்து இல்லை

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (19:14 IST)
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்ட முதல் அறிக்கையில் அவரது கையெழுத்து இல்லை.


 

 
அதிமுக பொதுச் செயலாலராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா இன்று ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டி தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் அவரது கையெழுத்தை காணமுடியவில்லை. அறிக்கையின் கடைசி பக்கத்தில் வி.கே.சசிகலா, பொதுச் செயலாளர், அனைத்திந்திய அண்ணா திமுகழகம் என்று இருந்தது. ஆனால் அவரது கையெழுத்து இல்லை.
அடுத்த கட்டுரையில்