இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு அச்சம்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்..!
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:12 IST)
இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்தியா கூட்டணியை பார்த்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் தான் இந்தியா என்ற நாட்டையே பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 6 மாநிலங்களில் நடந்த 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பாஜக மூன்று தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியின் வெற்றி பாஜகவை அச்சப்படுத்தி உள்ளது என்றும் அதனால் தான் பாரத் என்ற பெயரை மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போலவே நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்