நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர், G20 மண்டபத்தில் வெள்ளம்- அமைச்சர் உதயநிதி

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (17:00 IST)
‘’ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.

இதுகுறித்து அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி ’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்