நேற்று திருமணம்; இன்று போராட்டம்: சசிகலா புஷ்பா!

செவ்வாய், 27 மார்ச் 2018 (21:25 IST)
சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. எப்போதும் சர்ச்சையுடனே இருக்ககூடிய நபர் இவர். 
 
இந்நிலையில், நேற்று இவரது திருமணம் நீதிமன்றம் தடை விதித்த பின்னும் டெல்லியில் நடந்து முடிந்தது. ஏற்கன்வே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுள்ள ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்துக்கொண்டார்.  
 
சசிகலா புஷ்பாவும், அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வரனும் விவகாரத்து செய்வதாய் டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறு இருக்கையில் நேற்று திருமணம் முடிந்த கையோடு இன்று போராட்டத்தில் இறங்கி அதிரடி காட்டியுள்ளார். ஆம், தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் களமிறங்கியுள்ளர். 
 
தற்போது தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கல் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
அந்த வகையில், தூத்துகுடியை சேர்ந்தவர் என்பதால் தன்னையும் இந்த போராட்டத்தில் ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எழுதப்பட்டிருக்கும் பதாகைகளுடன் இவர் போராடுவது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்