எதிர்பார்த்தபடியே பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா!

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:30 IST)
அதிமுக எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா அதன்பின் தினகரனின் ஆதரவாளராக இருந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது
 
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சசிகலா புஷ்பா சற்றுமுன்னர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது
 
அதிமுக அமமுக என இரண்டு கட்சிகளில் இருந்த சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்த பின்னர் பாஜகவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்