சசிக்கலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது? – மருத்துவமனை இன்று அறிவிப்பு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:55 IST)
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிக்கலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அவருக்கு தற்போது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாம் என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்