சசிக்கலா எண்ட்ரி; சென்னை முழுவதும் போஸ்டர்! – அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (08:50 IST)
நாளை சசிக்கலா சென்னை வர உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா காரணமாக சிகிச்சை பெற்ற அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்ததால் பெங்களூரிலிருந்து நாளை சென்னை வருகிறார் சசிக்கலா.

இதனால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிக்கலா வருகையையொட்டி சென்னையின் பிரதான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம், வேதா இல்லம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்