சசிகலாவும் தினகரனும் ஈபிஎஸ் தலைமையை ஏற்க வேண்டும்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:29 IST)
சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். 
 
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ராஜன்செல்லப்பா சமீபத்தில் அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை தினகரன் மற்றும் சசிகலா ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
 
 சசிகலாவையும் தினகரனையும் அமுகவில் இணைக்க ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்