தமிழகத்தைப் பற்றி பேச ரஜினிக்கு என்ன தகுதி இருக்கு: சரத்குமார் கொந்தளிப்பு!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (10:19 IST)
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். இதில் ரஜினி கூறிய கருத்து அரசியலில் பரபரப்பாக பேசாப்பட்டது. இதற்கு நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 
 
துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி தனது கருத்தை கூறினார். மேலும் தமிழ்நாட்டில் அரசியல் சூழல் அசாதாரணமாக உள்ளது என கூறினார். இதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
அப்படி என்ன சூழல் நிலவுகிறது என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கருத்து கூற ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் அரசியலுக்கு வந்தால் நான் தான் முதலில் எதிர்ப்பேன் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்