18 ஆவது மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் பொருட்டு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்க வலியுறுத்தி வந்தது.
மக்களவையில் இன்று காலை கூடியதும் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஓம் பிர்லா பெரும்பானமையானோரின் வாக்குகளை பெற்ற நிலையில், மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி அழைத்து வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, சபாநாயகர் பதவி கடினமானது என்றாலும், ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி என்றார். சபாநாயகராக மீண்டும் தேர்வாகி உள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.