நான் சென்னையில் இருந்து திருச்செந்தூரில் போட்டியிடுவதாக சில அரசியல் கட்சி தலைவர்களம், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. சென்னையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் போது, நான் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட கூடாதா? என கேள்வி எழுப்பியவர், திருச்செந்தூர் முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி சுற்றுலா தலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.