சென்னையை சேர்ந்த பெண் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அந்த வைரஸ் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக இருக்கும் பெண் ஒருவருக்கு சமயத்தில் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
இதில் அவரது குடும்பத்தில் உள்ள 3 வயது குழந்தை உட்பட ஐந்து பேருக்கும் கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெண் தூய்மை பணியாளரின் குடும்பத்தினர் அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் வீடு அருகே உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும், கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர்களுக்கும், கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரித்து வரும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தூய்மை பணியாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது