சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:20 IST)
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக, இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். 
 
இதற்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 21 ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறவுள்ளதால் அதுவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்