வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து?? – கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (08:46 IST)
தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.சி.வீரமணி. அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை,வேலூர், திருவண்ணாமலை உள்பட அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் அவர் வருமானத்திற்கும் மேல் 654% சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்