துணை சபாநாயகர் சென்ற கார் விபத்து? – தாராபுரத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:16 IST)
தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கார் விபத்துக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தாராபுரம் வருகை தருகிறார். இந்நிலையில் இந்த பிரச்சார நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்க சென்ற முதல்வர் காரை பின் தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காரும் சென்று கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த வாகனங்கள் மோதியதில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்