அதில் குறிப்பாக பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் தற்போது அதே கட்சியில் இணைந்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பாஜகவை விமர்சித்துள்ளேன். பல ட்விட்டுகளை பதிவிட்டுள்ளேன். அதெல்லாம் என் அட்மின் பதிவிட்டது என நான் சொல்லமாட்டேன் என எச்.ராஜாவை கலாய்க்கும் தோணியில் பதில் அளித்தார்.
மேலும், நான் காங்கிரஸில் இருந்த போதும் முத்தலாக் போன்ற சட்டத்திற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறேன். மோடியையும் பாராட்டி இருக்கிறேன், ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சி என்பது எதிர்ப்பதற்காக மட்டுமல்ல அதற்கான தீர்வையையும் காண்பது தான் என தெரிவித்துள்ளார்.