அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால், அண்ணாமலை ஆடுதான் மேய்த்திருப்பார்: - ஆர்.எஸ்.பாரதி

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:27 IST)
அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்றும் அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் நெய்திருப்பார் என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக ஆகி இருக்க மாட்டார் என்றும் திமுகவின்  ஆர் எஸ் பாரதி பேட்டி அளித்துள்ளார்.  
 
அண்ணாவை தமிழ்நாட்டில் அனைவரும் மரியாதையுடன் தான் பார்ப்பார்கள் என்றும் ஆனால் நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை, அவரை அண்ணாதுரை என்று அழைக்கிறார் என்றும் அது மரியாதை குறைவானது என்றும் தெரிவித்தார். 
 
அண்ணாவை பற்றி யாரும் இழிவாக பேசினால் தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதன் விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணா ஆடுதான் மேய்த்து இருக்க வேண்டும் என்றும் அண்ணாவால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார் என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்