பிரதமரின் வீடு உள்ள இடமும் பஞ்சமி இடம்? ஆர்.எஸ்.பாரதி போட்ட புதுகுண்டு

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (22:30 IST)
முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் இருக்கின்றதா/ இல்லையா? என்பதை அறிய இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் முரசொலி அலுவலகம் வந்து விசாரணை செய்தனர். இதுகுறித்து ஆர் எஸ் பாரதி ஆவேசமாக கூறியதாவது:
 
எங்கள் மீது புகார் கொடுத்தவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள். இவர்கள் வாய்தா வாங்குவது எதை காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்
 
பிரதமர் மோடியின் வீடு பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று ரோட்டில் போகிற யாராவது புகார் கூறினால் உடனே நீங்கள் விசாரித்து விடுவீர்களா என்று ஆணையரிடம் கேட்டேன் 
 
தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பிடம், பாஜக அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் விசாரிப்பீர்களா? என்றும் நான் கேட்டேன்
 
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க அரசுக்கு ஒரு மணி நேரம் போதும். முன்பே சம்மன் அனுப்பி இப்போதுவரை ஆவணங்களை அவர்கள் தேடுகிறார்கள் 
 
உங்களுக்கு திராணி, தைரியம், ஆதாரம் இருந்தால் ஆணையம் முன்பு வாருங்கள். நாங்கள் உங்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
 
பொய்யாக வழக்கு தொடுத்தவர் மீது அவதூறு வழக்கு தொடுக்க இருக்கின்றோம். இதனை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த மருத்துவரின் நிலம் ஆயிரம் ஏக்கர் யார் யாருடையது என்பது குறித்து அவதூறு வழக்கின் போது தெரிவிப்போம்
 
இன்று இந்த வழக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். அடுத்த விசாரணை எல்லாம் கூப்பிட மாட்டார்கள். கூப்பிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒருவேளை மீண்டும் அழைத்தாலும் கட்டாயம் வருவோம் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்