சத்தியமங்கலம் கூலி தொழிலாளி வீட்டிற்கு ரூ. 94 ஆயிரம் மின்சார பில்: ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:11 IST)
சத்தியமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு மின்சார பில் 94 ஆயிரம் வந்துள்ளது பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரேவண்ணா என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இது இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துவதால் இதுவரை அவர் மின்சார பில் கட்டியதே இல்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திடீரென அவரது செல்போன் எண்ணிற்கு மின்சார கட்டணம் 94 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார் 
 
அப்போது மின்சார வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் தவறுதலாக பதிவு ஆகிவிட்டதாகவும் தற்போது அந்த தவறு சரி செய்யப்பட்டதாகவும் கூறினார். இதனை அடுத்தே கூலித்தொழிலாளி நிம்மதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்