வெள்ள நிவாரணம்: ரூ.5000 கோடி கேட்ட முதல்வர்.. பிரதமர் ஒதுக்கிய தொகை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:36 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெல்ல நிவாரண உதவியாக ரூ.5000 கோடி கேட்ட நிலையில் முதல் கட்டமாக தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கி இருப்பதாக பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரதம மோடி உத்தரவிட்டு உள்ளார் 
 
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்