விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரத்தில் வசித்து வருபவர் ராமர்பிள்ளை. ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலை அறிமுகம் செய்தார்.
அதனையடுத்து, வரும் 27 ஆம் தேதி விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் விற்பனை செய்திட விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யதுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வரும் 27 ஆம் தேதி பொதுமக்களுக்கு மூலிகைப் பெட்ரோல் விற்பனை செய்யவுள்ளோம். இதற்கான மதுரை தென்காரி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர்,மூலிகைப் பெட்ரொலின் உற்பத்திக்கு தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதன்படி கழிவுநீரில் மூலம் இதை உற்பத்தி செய்து வருகிறோம் இதன் மூலம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒரு லிட்டர் பெட்ரோலில் 80 லிட்டர் தூரம் வரை மைலேஜ் பயணம் செய்யலாம் என தெரிவித்தார்.