மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் உள்ள கடந்த 7 ஆம் தேதி சங்கரபாண்டிபுரம் எனும் பெண்ணின் பிணம் ஒன்று கைப்பற்றப்பட்டது. முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரம்ம் ஏற்பட்டது. அதன் பின் போலிஸார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் ’நான் கேரளாவில் டி எஸ்டேட்டில் வேலைப் பார்த்த போது ஒரு பெண்ணுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை என் மனைவிக் கண்டுபிடித்து அடிக்கடி சண்டைப் போட்டாள். அதனால் மனைவியைக் கொலை செய்துவிட்டு மீண்டும் கேரளா வந்துவிட்டேன். எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவரைக் கைது தமிழகம் கொண்டுவந்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.