அய்யலூர் சிறப்பு ஆட்டுச் சந்தை: 2 கோடிக்கு விற்பனை!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:30 IST)
பொங்கல் தினத்தையொட்டி போடப்பட்ட அய்யலூர் சிறப்பு ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை. 

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர்  சிறப்பு சந்தை நடைபெற்றது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் விற்பனைக்கு வந்தது.
 
எட்டு கிலோ மதிப்புள்ள ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், சண்டை சேவல்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. நாட்டு சேவல்கள் 1000 முதல் 2000 வரை விற்கப்பட்டது. சந்தை முடிவில் சுமார் 2 கோடிக்கு மேல் ஆடுகளும் கோழிகளும் விற்பனை ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்