கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வக் நித்தின் தனியார் பள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் விரும்பி உண்ணக்கூடிய கடலை பட்டாணி உள்ளிட்டவைகளில் பிளாஸ்டிக் பையில் வைத்து ஸ்டேப்ளர் அடித்து அதை நூதன முறையில் எடுத்துக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியிரிட மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி விட்டு வரும் வகையில் ஐந்து ரூபாய் கடலை பாக்கெட் ஒன்று வாங்கி சாப்பிட்டேன் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட அந்த கடலை பாக்கெட்டில் ஸ்டேப்ளர் பின் அடிக்கப்பட்டிருந்தது.