குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (18:19 IST)
கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவாதாக அறிவித்தது.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இந்த திட்டம் இத்திட்டம் எப்போது அமலுக்கு வருமென்று மக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-24 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட்டின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

இதுபற்றி இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் முக.,ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அந்த வகையில் தற்போது மாதம் ரூ.1000 பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 திட்டத்தில் சேர தகுந்த பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்குழுவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தப் பயனாளர் பட்டியல் தயாராகும் பட்சத்தில் இதுவிரைவில் முதல்வர் முக.ஸ்டாலின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்