மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திங்கள், 13 மார்ச் 2023 (15:16 IST)
அரக்கோணம் அருகே வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வயல்வெளியில் பன்றிக்காக மின்வேலியில் சிக்கி வயல்வேலி உரிமையாளர் வரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரக்கோணம் அருகே வயல்வெளியை பன்றிகள் நாசம் செய்து வருவதால், அதனிடமிருந்து விவசாய விளைபொருட்களையும், நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கி, விவசாயிகள்  மின்வேலி அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த வேலியில் இரவு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சப்படும். இந்த  நிலையில் அரக்கோணம் அருகே, அசநெல்லிக்குப்பம், பகுதியில் பன்றிக்களுக்காக மின்வேலி அமைககப்பட்டிருந்தது.

அப்பகுதியில் சுற்றுலா நடைபெற்று வரும்  நிலையில், கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காட்டுப்பாதை வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர்  (19) ஒருவர் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கிப் பலியானார்.

இதுகுறித்து,  நிலஉரிமையாளார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்