திமுக ஆட்சியில் ரூ 100 கோடி ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவு ! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (19:47 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி ஆட்சி நடைபெற்ற போது வங்கியில் ரூ 100 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ க்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியின் போது கடந்த 2006- 2007 ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அக்கட்சியினர் ரூ. 100 கோடி அளவுக்கு ஊழல் செய்தது தெரியவந்தது.
 
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சென்னை நீதிமன்றம் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும்  காஞ்சிபுரம், பேரூர், திருவொற்றியூர்,பல்லாவரம்,  அம்பத்தூர், ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் அதிக அளவில் திமுகவினர் ஊழல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்