நொய்டா வரதட்சிணை கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆறு மாதத்தில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: கிரண் பேடி

Siva

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (15:33 IST)
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த வரதட்சிணை கொலை சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். "இது ஒரு வெளிப்படையான, தெளிவான கொலை வழக்கு. விசாரணையை சில வாரங்களில் முடித்து, ஆறு மாதங்களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்" என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்ட நிக்கியின் கணவர் விபின் பாத்தி குறித்து பேசும்போது, "அவன் தூக்கிலிடப்பட வேண்டும். இது ஒரு வெளிப்படையான, தெளிவான வழக்கு. விசாரணையை சில வாரங்களில் முடிக்க முடியும். ஏனெனில், 'அப்பா அம்மாவை கொன்றார்' என்று ஒரு குழந்தை சொல்வதே மிக தூய்மையான ஆதாரம். அவர்கள் திருமணம் ஆகி சில வருடங்களே ஆகிறது. இந்த பிரச்சினை தொடர்ந்து நடந்து வந்திருக்க வேண்டும். அவள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று, பின்னர் சமரசம் செய்துகொண்டு திரும்பி வந்திருக்கிறாள்.
 
ஏன் சமரசம் செய்ய வேண்டும்? ஏன் இது குறித்துக் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை? எங்கள் மகளின் பாதுகாப்பை கண்காணிக்க வேண்டும் என்று ஏன் போலீசிடம் கேட்கவில்லை? காவல்துறை தலையிட்டு அவளது உயிரை காப்பாற்றியிருக்கலாம். அக்கம் பக்கத்தினர் எங்கே போனார்கள்? அவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். கிராம பஞ்சாயத்துகள் என்ன செய்தன? இது குறித்து போலீசாருக்குத் தெரிவிப்பது அவர்களின் கடமை இல்லையா?" என்று கிரண் பேடி கேள்விகளை எழுப்பினார்.
 
நாம் பிச்சைக்காரர்கள் மற்றும் கோழைகளின் சமூகத்தை உருவாக்குகிறோம். அந்த மாமியார், மாமனார் பிச்சைக்காரர்கள். இதைவிட மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்