பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (10:22 IST)
சென்னையில் பங்குச்சந்தை வர்த்தக வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை போனதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை எம் ஆர் சி நகரில் பங்குச்சந்தை வர்த்தக கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 250 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்சம் ரொக்கம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
 திருடு போன மொத்த நகைகள் மற்றும் ரொக்கம் மதிப்பு ரூபாய் 2 கோடி என்று கூறப்பட்டுள்ள நிலையில் பட்டினப்பாக்கம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக பங்குச்சந்தை வர்த்தகர் கோபால் கிருஷ்ணனின் ஓட்டுநர் சரவணன் என்பவரை காவல் துறை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
சென்னை பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் இரண்டு கோடி மதிப்பில்லான நகைகள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்